நெல்லையில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
- ம.தி.மு.க. சார்பில் கவர்னருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்துகொண்டு முதல் கையெழுத்திட்டார்.
நெல்லை:
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக கூறி அவரை அப்பொறுப்பில் இருந்து உடனடியாக அகற்ற குடியரசு தலைவரை வலியுறுத்தி நெல்லை டவுன் காந்தி சிலை முன்பு இன்று நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கவர்னருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்துகொண்டு முதல் கையெழுத்தை போட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், ஐ.யூ.எம்.எல். நெல்லை மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமது அலி, ம.தி.மு.க. நிர்வாகிகள் மணப்படை மணி, கல்லத்தியான், கோல்டன் கான் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர். முன்னதாக காந்தி சிலைக்கு மேயர் சரவணன் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம் மாலை அணிவித்தனர்.