உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

குறுவட்ட விளையாட்டு போட்டியில் சீர்காழி பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-10-06 09:55 GMT   |   Update On 2023-10-06 09:55 GMT
  • மாவட்ட அளவிலான போட்டிக்கு 30 மாணவர்கள் தகுதி பெற்றனர்.
  • 13 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.

சீர்காழி:

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சீர்காழி குறு வட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடை பெறும்.

இந்த போட்டிகள் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடைபெற்றது. போட்டிகளில் அனைத்து வகையான குழு போட்டிகளும், தடகள போட்டிகளும் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வளைகோல் பந்து மூன்று பிரிவுகளிலும் முதலிடம், கூடை பந்தாட்டத்தில் மூன்று பிரிவுகளிலும் முதலிடம், பூப்பந்தாட்ட போட்டியில் ஐந்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்று மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் தடகளத்தில் மாணவிகளுக்கான ஜூனியர் பிரிவில் 6 போட்டியிலும் சீனியர் பிரிவில் 14 போட்டியிலும் சூப்பர் சீனியர் பிரிவில் 9 போட்டியிலும் மாணவர்களுக்கான ஜூனியர் பிரிவில் 6 போட்டியிலும் சீனியர் பிரிவில் ஒன்பது போட்டியிலும் சூப்பர் சீனியர் பிரிவில் மூன்று போட்டியிலும் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு 30 மாணவ,மாணவிகள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் ஜூனியர் பிரிவில் ஆர். சுருதிஹா 10 புள்ளிகளும், சீனியர் பிரிவில் ஏ அபர்ணா 13 புள்ளிகளும், சூப்பர் சீனியர் பிரிவில் சமினா ராகவி 13 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.

சீர்காழியில் நடைபெற இருக்கும் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு செல்ல இருக்கும் மாணவ மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர் முரளி, மார்கண்டன், சக்திவேல், ராகேஷ், கபிலன் ஆகியோரை பள்ளி குழு தலைவர் சிதம்பரநாதன் பள்ளியின் முன்னாள் செயலர்கள் பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், பள்ளிச் செயலர் சொக்கலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கபாலி பழைய மாணவர் சங்கச் செயலர் முரளிதரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். அறிவுடை நம்பி உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், சீனிவாசன் மற்றும்ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News