உள்ளூர் செய்திகள்

சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

Published On 2022-09-05 09:30 GMT   |   Update On 2022-09-05 09:30 GMT
  • 3-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 877.30 மீட்ட ராக உள்ளது.
  • கடந்த சில நாட்களில் 10 கோடியே 6 லட்சம் லிட்டர் வரை குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது

கோவை,

கோவை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை. அங்கு இருந்து மாநகரில் உள்ள 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 878.50 மீட்டர் கொள்ளளவு கொண்ட அணையில் கடந்த வாரம் 876.70 மீட்டர் அளவுக்கு தண்ணீர் இருந்தது.

இந்த நிலையில், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் அணைக்குச் செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு, அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

3-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 877.30 மீட்ட ராக உள்ளது. இன்னும் 1.20 மீட்டர் உயரம் நீர்மட்டம் உயர்ந்தால் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டும்.

இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

அணையில் இருந்து கடந்த சில நாட்களில் 10 கோடியே 6 லட்சம் லிட்டர் வரை குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது, அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 11 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்க ப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News