சான்று இல்லாமல் பொட்டல பொருட்களை விற்ற 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- சான்று இல்லாமல் பொட்டல பொருட்களை விற்ற 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.
சிவகங்கை
சென்னை முதன்மைச் செயலாளர்-தொழிலாளர் ஆணையரின் உத்தரவின்படியும், சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிவுறுத்தலின் படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையரின் வழிகாட்டுதலின்படியும, தொழிலாளர் இணை ஆணையரின் அறிவுரையின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் தயாரிப்பாளர்கள், பொட்டலமிடுபவர்கள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்யும் 35 வணிக நிறுவனங்களில்
சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பொட்டல–ப்பொருட்கள் விதிகளின் கீழ் காணப்பட வேண்டிய சான்றுரைகள் இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்த 5 நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தயாரிப்பாளர்களும் பொட்டலம் இடுபவர்களும் விற்பனையாளர்களும், நுகர்வோர் நலன் கருதி தயாரிப்பாளர், பொட்டலமிடுபவரின் பெயர், முழு முகவரி, பொட்டலப்பொருளின் பெயர், நிகர எடை, தயாரிக்கப்பட்ட மாதம் ,வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் குறைதீர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் பின்பற்றப்பட வேண்டிய விபரங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வணிகர்கள் எடை அளவைகள் மற்றும் தராசுகளை முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். மேலும், வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் அவர்களின் பெயர், விவரங்களை "labour.tn.gov.in/ism" என்ற இணையதளத்தில் கட்டாயம் விடுதலின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.