உள்ளூர் செய்திகள் (District)

நாலுகோட்டை அதிகுந்த வரத அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

அதிகுந்த வரத அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா

Published On 2023-09-03 06:07 GMT   |   Update On 2023-09-03 06:07 GMT
  • அதிகுந்த வரத அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
  • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்ட னர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள நாலுகோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூரண புஷ்கலா சமேத அதிகுந்த வரத அய்யனார் கோவில் உள்ளது.

இங்கு புரவி எடுப்பு விழா கிராம கமிட்டி தலைவரும், நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவருமான மணிகண்டன் மற்றும் ஆறூர் வட்டகை நாடு நாட்டு அம்பலம் அழ.ஒய்யணன் முன்னிலையில் நடைபெற்றது.

அய்யனார் சாமிக்கு காப்பு கட்டி விழா தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

முன்னதாக கிராம விநாயகர் கோவிலில் இருந்து களிமண்ணால் செய்யப்பட்ட மண் குதிரைகளை விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தோளில் சுமந்து மங்கள வாத்தியங்களுடன் கிராமத்தை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து கோவில் சென்றடைந்து அய்யனார் சாமிக்கு புரவிகளை சமர்ப்பித்து வழி பட்டனர்.

முடிவில் மூலவர் அய்யனார் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்ட னர்.

Tags:    

Similar News