தமிழ்நாடு

உதயநிதியை கூப்பிடவா? - மதுபோதையில் போலீசாரை அசிங்கமாக திட்டிய நபர் - வீடியோ வைரல்

Published On 2024-10-21 09:19 GMT   |   Update On 2024-10-21 09:19 GMT
  • யார் சார் நீங்க... என்று கேட்ட போலீசாரை அந்த ஜோடி தரக்குறைவாக பேசினர்.
  • நாளை காலையில உன் அட்ரஸ் எல்லாம் எடுத்து விடுவேன். ஒருத்தன் இருக்க மாட்டீங்க.

சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசினார்.

யார் சார் நீங்க... என்று கேட்ட போலீசாரை அந்த ஜோடி தரக்குறைவாக பேசினர்.

கைது செய்வோம் என்று போலீசார் கூறியதற்கு, அதற்கு அந்த நபர், இவன் எல்லாம் அள்ளக்கை. அரெஸ்ட் பண்ண போறீயா... முடிந்தால் பண்ணுடா...

போய் உன் ஆளை கூட்டிட்டு வா... இன்ஸ்பெக்டரை கூட்டிக்கொண்டு வா...

நாளை காலையில உன் அட்ரஸ் எல்லாம் எடுத்து விடுவேன். ஒருத்தன் இருக்க மாட்டீங்க என்று கெட்ட வார்த்தைகளில் வசைபாடினார். மேலும் அந்த நபர், போலீசாரின் போனை பிடுங்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

அதற்கு அந்த பெண் இவன் எல்லாம் ஒரு ஆளு இவனை போய்... என்று சொல்லும் வீடியோ வைரலாகி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Full View
Tags:    

Similar News