உள்ளூர் செய்திகள்

கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

கருத்து கேட்பு கூட்டம்

Published On 2022-09-27 08:22 GMT   |   Update On 2022-09-27 08:22 GMT
  • திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
  • இதில் செயல் அலுவலர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமை தாங்கினார். அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டு நிறுவனங்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி தெருக்களின் நிலவரம் குறித்தும் கண்மாய் மற்றும் வர்த்தக பகுதிகளின் நிலவரம் குறித்தும் குறும்பட காட்சி காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் தூர்வாருதல், வரத்து கால்வாய்கள் பராமரிப்பு செய்தல், நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், நகரின் தூய்மை குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல், நகரின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடுதல், தெருக்களில் சுற்றிதிரியும் நாய், மாடு, குரங்கு, பன்றி மற்றும் ஏனைய பிராணி களை கட்டுப்படுத்துதல், மயானங்கள் மற்றும் மக்கள் பயன்பாடு இடங்களை பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், நாள்தோறும் விநியோகிக்கப்படும் தண்ணீரை மின் மோட்டார் கொண்டு உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துதல், மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை கொண்டு வருதல், பாகுபாடின்றி நகரில் அனைத்து பகுதிகளிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல் போன்ற பல்வேறு நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்தும், அதனை உடனடியாக செயல்படுத்துவது குறித்தும் அனைத்து தரப்பினரிடமும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்டு அறியப்ப ட்டது.

இதில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News