மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு
- மானாமதுரை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூக்குழி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீ மிதித்தும் பக்தி பரவசத்துடன் நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.
விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் உற்சவ விழா மற்றும் முளைப்பாரி நடைபெற்றது. இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்தும் அலகு குத்தியும் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் கோவிலுக்கு எதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வேண்டுதல் நிறை வேற்றினர். பல பக்தர்கள் இடுப்பில் குழந்தைகளை கட்டிக்கொண்டு தீ மிதித்தனர்
அதன்பின் மாரியம்ம னுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.