உள்ளூர் செய்திகள்

பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

Published On 2023-05-23 08:34 GMT   |   Update On 2023-05-23 08:34 GMT
  • திருப்பத்தூரில் வசந்த விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
  • வசந்த பெருவிழா குழு நிர்வாகத்தால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோவில் 89-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு

13-ம் ஆண்டு வசந்த விழா நடந்தது. 10 நாள் விழாவாக நடந்த இந்த விழாவில் பால்குட திருவிழா விமரிசையாக நடந்தது. சாம்பான் ஊரணி அருகே உள்ள கோட்டை கருப்பர் கோவிலில் இருந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் பால்குடம், பூத்தட்டுகளை தலையில் சுமந்து 4 ரோடு, கீழரத வீதி, தேரோடும் வீதிகள் வழியாக கோவில் திருக்குளத்தை சுற்றி பூமாயி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்பு பூமாயி அம்மனுக்கு திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் பூமாயி அம்மனுக்கு பூச்சொரிந்தனர். வசந்த பெருவிழா குழு நிர்வாகத்தால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சோழிய வெள்ளாளர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News