உள்ளூர் செய்திகள் (District)

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-14 07:30 GMT   |   Update On 2023-03-14 07:30 GMT
  • எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • சிவகங்கையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார்.

சிவகங்கை

சிவகங்கையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முன்னாள் முதல்-அ மைச்சர் எடப்பாடி பழனி சாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்தார். அப்போது அ.ம.மு.க. பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலர்மீது மதுரை அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன் குணசேகரன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், கருணாகரன், ஸ்டீபன் அருள்சாமி, சிவாஜி, கோபி, செல்வமணி, ஜெகதீஸ்வரன், பழனிசாமி, ஸ்ரீதர், சோனைரவி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பில்லுர் ராமசாமி மாரிமுத்து, கோமதிதேவராஜ் மற்றும் நாலுகோட்டை ஊராட்சி மன்றதலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News