உள்ளூர் செய்திகள் (District)

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-11-24 06:40 GMT   |   Update On 2023-11-24 06:40 GMT
  • மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பனிக்கனேந்தலில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை மீண்டும் அரசு எடுத்து கொள்ள வேண்டும் என்று மனு கொடுக் கப்பட்டது. இந்த மனுவை ஏற்று கொண்ட வட்டாட்சி யர் ராஜா 3 மாதத்திற்குள் தனியார் வசம் ஒப்படைக் கப்பட்ட அரசு நிலங்களை மீண்டும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 3 மாதத்திற்கு முன்பு கூறி இருந்தார்.

அதேபோல் இந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இதை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டம் நடத்தியவர்களிடம் வட்டாட்சியர் ராஜா தலைமையில் இன்ஸ் பெக்டர் முத்துகணேஷ். மானாமதுரை நகராட்சி ஆணையர் ரங்கசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 3 மாதங்களுக்குள் அனைத்து கோரிக்கைகளும் தீர்வு காணப்படும் என அவர்கள் எழுத்து பூர்வமாக கூறியதையடுத்து இந்த போராட்டம் கைவிடப் பட்டது.

முன்னதாக போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாந்தி, மாவட்ட துணை செயலாளர் சண்முகப் பிரியா மற்றும் வருவாயத் துறை அதிகாரிகள் உமா மீனாட்சி, கார்த்திகா, சீதாலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News