- மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது.
- வீர அழகரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்றில் பிரசித்தி பெற்ற வீர அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 11-ந்தேதிவரை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் இரவு பன வீர அழகர் என்ற நாமத்துடன் அழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாள் மண்டகப்படிகளில் எழுந்தருளி, பின்னர் வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.25 மணியில் இருந்து 7.25 மணி வரை நடைபெறுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) இரவு மானாமதுரை கிராமத்தார் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் பக்தர்கள் வீர அழகருடன் வைகைஆற்றில் நிலாசோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று முதல்நாள் நிகழ்ச்சி மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. நகராட்சி அலுவலகத்தில் வீர அழகரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.