உள்ளூர் செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் கோவிலூர் கெமிக்கல்ஸ் அணி சாம்பியன்

Published On 2022-07-27 08:43 GMT   |   Update On 2022-07-27 08:43 GMT
  • கிரிக்கெட் போட்டியில் கோவிலூர் கெமிக்கல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

காரைக்குடி

காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் 8-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானங்களில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இறுதிப்போட்டியில் கோவிலூர் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் அணியும், காரைக்குடி மூன்லைட் அணியும் மோதியதில் கெமிக்கல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர்நாயகனாக கெமிக்கல்ஸ் அணியின் பார்த்தசாரதியும், பந்து வீச்சாளராக ராமச்சந்திரனும், ஆல்ரவுண்டராக நைட்ஸ் அணியின் சிவசங்கரும், சிறந்த பயிற்சியாளராக அழகப்பா கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளை வென்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ், தொழிலதிபர் செந்தில்குமார், பள்ளத்தூர் சங்கர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சங்கர், துணை தலைவர் பெஸ்ட் பாண்டியன், லத்தீப் மெமோரியல் அணி செயலாளர் சிவானந்தம், பழமலை, திருச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News