உள்ளூர் செய்திகள்

பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு

Published On 2023-04-11 09:04 GMT   |   Update On 2023-04-11 09:56 GMT
  • பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
  • கிராம மக்கள் போக்குவரத்து வசதிக்காக பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து தினந்தோறும் மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் தேவகோட்டை, காரைக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள பல்வேறு வேலை தொடர்பாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். புளியால் சுற்றியுள்ள கிராம மக்கள் போக்குவரத்து வசதிக்காக இந்த பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

பயணிகள் நிழற்குடை அருகே ஆக்கிரமிப்பாலும், எப்பொழுது விழுமோ என்ற அச்சத்தில் நிழற்குடை மேல் பிளக்ஸ் போர்டு இருப்பதாலும் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் நிழற் குடையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதிகாரிகள் நிழற்குடையின் மேல் உள்ள பிளக்ஸ் போர்டையும் அருகில் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்றி மாணவ- மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நிழல் தரும் வகையில் அமைந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து கட்டிய நிழற்குடை பயன்பாட்டிற்கு வரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News