- சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் நெல் அறுவடை திருவிழா நடந்தது.
- நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கோடை நெல் அறுவடைத்திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கி சுற்று வட்டார கிராம விவசாயிகளை வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் கருணாநிதி பண்ணையில் பயிரிட்ட திருச்சி -1 மற்றும் திருச்சி-3 ஆகிய நெல் இரகங்களின் சிறப்புகளை விவசாயிகளுக்கு விளக்கினார். விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நெல் அறுவடையில் கலந்துகொண்டனர். நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
இவ்விழாவில் நெல் சாகுபடி மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். எஸ்.ஆர் பட்டினம், விசாலயன் கோட்டை, கலிப்புலி, காளையார்கோவில் மற்றும் புலிக்குத்தியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர், கல்லூரியின் இயக்குநர் கோபால் நன்றியுரை வழங்கினார்.