உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியல் டயாலிசிஸ் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு ப.சிதம்பரம் தலைமையில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம்

Published On 2023-06-04 08:15 GMT   |   Update On 2023-06-04 08:15 GMT
  • சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் இடத்தை ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.
  • காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை களில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை போன்ற மருத்துவமனை களில் மட்டுமே டயாலிசிஸ் பிரிவு சிகிச்சைக்கான தனி பிரிவு உள்ளது.

ஆனால் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் டயாலிசிஸ் சிகிச்சை முறை செய்து கொள்ள வேண்டிய நோயாளிகள் மதுரை, சிவகங்கை போன்ற நகரங்க ளுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.

எனவே சிங்கம்புணரி பகுதியில் உள்ள டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளி களுக்காக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையில் டயாலிசிஸ் பிரிவு சிகிச்சை கொண்டுவர அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

அதன்அடிப்படையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்க ளவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் பொது நிதியின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொள்ள மாநிலங்கள் அவை உறுப்பினர் ப.சிதம்பரம் தலைமையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணி நடைபெற்றது.

முன்னதாக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் அய்யன்ராஜ் வரவேற்றார். மருத்துவ மனை வளாகத்தை ஆய்வு செய்த ப.சிதம்பரம் டயாலிசிஸ் சிகிச்சைக்கான புதிய கட்டிடம் கட்டப்படும் இடம் குறித்து தலைமை மருத்துவர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை செய்தார்.

ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, பேரூராட்சி கவுன்சிலரும் சிங்கம்புணரி நகர காங்கிரஸ் தலைவரு மான தாயுமானவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் காங்கி ரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News