- சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் பிர்லாகணேசன், மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவல்லி முருகன், முருகன், வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் முருகன், வட்டார மருத்துவ அலுவலர் சாம் ஜேஷுரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், ரத்த அளவு, ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த பரிசோதனைகள், சளி மாதிரி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, இயற்கை உணவு தானியங்கள், அதிக சத்துள்ள காய்கறிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேவகோட்டை அரசு பொது மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகாமில் பங்கேற்றனர். முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.