- பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட தரியம்பட்டி கிராமத்தில் வழி விடு விநாயகர் வடக்கு வாசல் செல்வி அம்பாள் கருப்பர் ஆலய வருடா பிஷேக விழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. பாய்ந்து ஓடிய காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கிய காட்சிகளை பார்வை யாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் அம்பலக்காரர் ராஜா மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் செய்தி ருந்தனர். போட்டிக்கான விழாக்குழு பணிகளில் கமிட்டி நிர்வாகிகளான பரமசிவம், போஸ், சிங்காரம், மணிமாறன், பெரியசாமி ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.