உள்ளூர் செய்திகள்

வேலுநாச்சியார் நாடகத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, செந்தில்நாதன், ராணி மதுராந்திகி நாச்சியார், நகரசபை தலைவர் துரை ஆனந்த் மற்றும் பலர் உள்ளனர்.

ஆண்களுக்கு இணையாக பெண்கள் வீரமிக்கவர்களாக திகழவேண்டும்

Published On 2022-08-31 08:23 GMT   |   Update On 2022-08-31 08:23 GMT
  • ஆண்களுக்கு இணையாக பெண்கள் வீரமிக்கவர்களாக திகழவேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
  • முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

சிவகங்கை

சிவகங்கை அரண்மனை வளாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையார்ந்த நாடக விழா நடந்தது. இதை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் அளப்பறியாப் பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம் குறித்தும், போராட்டங்கள் குறித்தும், தாய்மொழியான தமிழ்மொழி குறித்தும், வீரம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளில் பங்கு பெற்ற முன்னோர்களை கவுரவிக்கும் வகையிலும் இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வீரமங்கை வேலுநாச்சியாரின் இசை நாடகம் அவர் வாழ்ந்த அரண்மனை வளாகத்தில் நடைபெறுவது, சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்க்கப்பதாகும். வெள்ளையனை வீரப்போர் புரிந்து எதிர்த்து, எதிரிகளை துவம்சம் செய்த காட்சிகளை கண் முன் எடுத்துக்காட்டும் நிகழ்வு சிறப்பாக இருந்தது.

இளைய தலைமுறை யினரான எதிர்காலச் சந்ததியினர் வேலுநாச்சியார் சிறப்பை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நாடகம் இருந்தது. வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த இசை நாடகத்தை அனைவரும் கண்டு களித்து, வீரம், நாட்டுப்பற்று மிக்கவராகவர்களாகவும், குறிப்பாக ஆண்களுக்கு இணையாக பெண்கள் வீரமிக்கவர்கள் என்பதை நிருபிக்கும் வகையிலும் வீரப்பெண்மணிகளாக திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), ராணி மதுராந்தகி நாச்சியார், ராஜ்குமார் மகேஷ்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா, ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News