உள்ளூர் செய்திகள்
ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிக்கும் சமூக ஆர்வலர்கள்
- ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என பலர் வாழ்ந்து வருகின்றனர்.
- பெரியாம்பட்டியில் உள்ள கோவிலில் இட்லி, தோசை, புளியோதரை சாதங்களை தினந்தோறும் காலையில் நேரத்தில் வழங்கி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு சாலைகளில் ஏராளமான ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என பலர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஆதரவற்றோர்க்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
நாள்தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவு அளிக்க திட்டமிட்டு 10-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் ஒருவர் என வருடம் முழுவதும் உணவு வழங்க முடிவு செய்து பெரியாம்பட்டியில் உள்ள கோவிலில் இட்லி, தோசை, புளியோதரை சாதங்களை தினந்தோறும் காலையில் நேரத்தில் வழங்கி வருகின்றனர்.