சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்
- அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
- நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் ஊராட்சி நர்சரி பகுதியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார வன அலுவலர் சுகுணா, மாவட்ட வன அலுவலர் செந்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை அருளாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த ஆண்டு கபிஸ்தலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கூட்டத்தில் தணிக்கை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.