உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கான சமூக சேவகர், விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2022-06-19 07:43 GMT   |   Update On 2022-06-19 07:43 GMT
2022-ஆம் ஆண்டிற்கான சமூக சேவகர், பெண்களுக்கான சேவை விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக பணியில் ஈடுபடும் இளையதலை முறையினருக்கு ஆர்வமூட்டுதல், சமூக சேவையாளர்களின் சவாலான பணியை அங்கீகரித்தல், சமூக பராமரிப்பில் பன்முகத்தன்மை மற்றும் சமவாய்ப்பினை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சதந்திர தின விழா முதல்-அமைச்சரால் மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான "சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது" குறித்த அறிவிப்பு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருதுகளைப் பெற தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதிற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிருவாகம் ஆகிய துறைகளில் தொண்டாற்றி இருக்க வேண்டும். இத்தகைய சமூக சேவகர்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருது பெற இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி, வருகிற 30-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News