சின்னசேலம் அருகே ஏரியில் மண் திருட்டு
- 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.
- சத்தம் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு கேட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள நீரால் பங்காரம் பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில் இந்த ஏரியில் சில நாட்களாக இரவு நேரங்களில் வாகனம் செல்லும் சத்தம் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு கேட்டுள்ளது. மறுநாள் காலையில் சென்று பார்த்ததில் ஏரியில் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதும் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் மண் திருடப்படுவதையும் அறிந்த அப்பகுதி மக்கள் மண் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க ஏரிக்கு சென்றுள்ளனர்.
பொதுமக்கள் வருவதை தெரிந்து கொண்ட மணல் திருடர்கள் மண் திருட பயன்படுத்திய2 கிட்டாச்சி வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.பின்னர் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கும் வருவாய் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இது போன்ற சட்டத்திற்கு எதிராகவும் நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.