நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு: ஆறுமுகநேரி மெயின் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றம்
- சாலையை ஒட்டிய இடத்தில் இருந்த அந்த மின் கம்பத்தில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
- இதனை ஆறுமுகநேரி மின்வாரிய உதவி பொறியாளர் ஜெபஸ்சாம், மின்பாதை ஆய்வாளர் மோகன் மற்றும் ஊழியர்கள் சரி செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பிற்கும் மத்திய பஜார் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இரும்பிலான மின் கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. சாலையை ஒட்டிய இடத்தில் இருந்த அந்த மின் கம்பத்தில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. எனவே குறிப்பிட்ட அந்த மின் கம்பத்தை அகற்றுமாறு பொதுநல அமைப்புகளின் சார்பில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அந்த இடத்தின் அருகே நடந்த கார் விபத்தின் காரணமாக மற்றொரு மின்கம்பம் சேதமடைந்தது.இதனை ஆறுமுகநேரி மின்வாரிய உதவி பொறியாளர் ஜெபஸ்சாம், மின்பாதை ஆய்வாளர் மோகன் மற்றும் ஊழியர்கள் சரி செய்தனர். தொடர்ந்து அவர்கள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். அப்போது அருகில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்றிருந்த இரும்பு மின் கம்பத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மின்வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.