உள்ளூர் செய்திகள்

சூரசம்ஹாரம் நடைபெற்றபோது எடுத்தபடம்.


ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

Published On 2022-10-31 09:16 GMT   |   Update On 2022-10-31 09:16 GMT
  • ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது.
  • மாலையில் சோமசுந்தரி அம்பாளிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆத்தூர்:

ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 25-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. சஷ்டி விழா நாட்களில் சுப்பிரமணிய சுவாமிக்கு காலையில் சிறப்பு வழிபாடுகளும், மாலையில் சுவாமி பிரகார வீதி உலாவும் நடைபெற்றது. கந்த சஷ்டி தினமான நேற்று காலை கும்ப பூஜை மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் சோமசுந்தரி அம்பாளிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஆத்தூர் 9-ம் சந்தி அருகில் நடைபெற்ற சூரசம் ஹாரத்தில் தாரகாசூரர், சிங்கமுகாசூரர், சூரபதுமர் ஆகிய வடிவங்களில் வந்த அசுரர்களை பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி சம்ஹாரம் செய்தார்.

சுப்பிரமணிய சுவாமி சூரபதுமரை ஆட்கொள்ளும் நிகழ்வும், வேல் அபிஷேகமும் நடைபெற்றது. நிறைவாக சுப்பிரமணிய சுவாமி மயூர வாகனத்தில் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தார். ஏற்பாடுகளை சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


Tags:    

Similar News