அ.தி.மு.க. மீது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.வினர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
- மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை அநாகரிகமான முறையில் பேசி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
- அவதூறாக பேசியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோரை பற்றி மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் அநாகரிக மான முறையில் அவதூறாக பேசியும் பாட்டு படித்ததை கைத்தட்டி கேலி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அப்போது தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், செங்கோட்டை ரஹீம், தென்காசி யூனியன் துணைத்தலைவர் கனகராஜ் முத்துபாண்டியன், இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.