உள்ளூர் செய்திகள்

டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கள்.

ரம்யா சத்தியநாதன் பள்ளியில் தென்னிந்திய அளவிலான டென்னிஸ் போட்டி

Published On 2022-12-07 09:44 GMT   |   Update On 2022-12-07 09:44 GMT
  • தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.
  • வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார்.

பூதலூர்:

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையே டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

இப்போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலு ங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமத் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமச் செயலர் ஜெனட் ரம்யா ஆகியோர் தலைமை‌ வகித்தனர்.

போட்டிகளை தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன் , தஞ்சாவூர் மாவட்ட டென்னிஸ் கழகத் தலைவர் டேவிட் அவர்களும் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.

பல போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில்கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி முதல் இடத்தையும், கரூர் டிஎன்பிஎல் பள்ளி 2ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில், சாரதா சில்ரன்ஸ அகாடமி ஷ்ரத்தா பள்ளிமுதல் இடத்தையும், சென்னை‌ வேலம்மாள்‌வித்யாலய பள்ளி இரண்டாம் இடத்தையும்,

19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கரூர் வேலம்மாள் பள்ளி முதல் இடத்தையும், சென்னை‌ பவன்ஸ்ரா ஜாஜி வித்யாஷ்ரம் 2ம் இடத்தையும், 19 வயதுக்குட்பட்டபெண்கள் பிரிவில் சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம்பள்ளி முதல் இடத்தையும், கோவை சச்சிதானந்தா ஜோதிநிகேதன் இன்டர் நேஷனல் பள்ளி 2ம் இடத்தையும் பெற்று வெற்றிபெற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார். போட்டிகளைரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் பெர்னாண்டஸ் துணை முதல்வர் அம்பேத்கர் நடத்தினர்.

Tags:    

Similar News