வழக்குகளை திறம்பட கையாண்ட கயத்தாறு போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
- நீதிமன்ற விசாரணையில் இருந்த சுமார் 75 வழக்குகளை முடிக்க உதவியாக இருந்த கயத்தாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட பலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.
- நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட 37 போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அதன்படி கயத்தாறு போலீஸ் நிலையத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 52 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல், 23 வழக்குகள் விசாரணையை முடித்தும், 59 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுத்தும் மற்றும் நீதிமன்ற விசாரணையில் இருந்த சுமார் 75 வழக்குகளை முடிக்க உதவியாக இருந்த கயத்தாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி, தலைமை காவலர்கள் கந்தசாமி, சண்முகநாதன், முதல் நிலை காவலர்கள் அழகுமுத்து பாண்டியன், முத்துராஜ், செல்லப்பாண்டி, காவலர்கள் காளிராஜ் மற்றும் முருகேஷ்வரி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கோடிலிங்கம், சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.