காகுப்பத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்:கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்
- பாதுகாப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
- 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், காகுப்பத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். முகாமில் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும் நோய்களிலிருந்து பாது காப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோ சனை வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.தொடர்ந்து, கால்நடை வளர்ப்பிற்கான கடன் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சிறந்த கறவைப் பசு பராமரிப்பு விவசாயி 3 நபர்களுக்கும், சிறந்த கிடேரி கன்று வளர்ப்பு விவசாயி 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குர் தலதா, துணை இயக்குநர் பொன்னம்பலம், உதவி இயக்குநர் மோகன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் .வேல்முருகன், கால்நடை உதவி மருத்துவர்கள் பாலாஜி, சிவா, சதானந்தன், சந்திரன், உஷாநந்தினி, கோவிந்தசாமி, சந்தியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.