உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நடந்த போது எடுத்தபடம்.

வழக்குகளை எளிதாக முடித்துக்கொள்ள சிறப்பு ஏற்பாடு

Published On 2022-12-17 09:40 GMT   |   Update On 2022-12-17 09:40 GMT
  • காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.
  • அனைத்து பெட்டிஷன்தாரர்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரிலும் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையிலும் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் தங்கள் குறைகளை பெட்டிஷனாக எழுதி காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளியிடம் கொடுத்தனர்.

அவர் அதை உடனடியாக பரிசீலித்து அந்த பெட்டிஷனுக்கு சம்பந்தப்ப ட்டவர்களை உடனடியாக காவல் நிலையத்துக்கு வரவழைத்து அனைத்து பெட்டிஷன்தாரர்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

இது குறித்து பொது மக்கள் கூறும் பொழுது, பெட்டிஷன் மேளா நடைபெறுகிறது என தெரிவித்ததும் உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தோம்.

அவர் அதை உடனடியாக பரிசீலித்து சம்பந்தப்ப ட்டவர்களை அழைத்து எங்கள் குறைகளை போக்கி கொடுத்தார். இதற்கு ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும், காவல் உயர் அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

பெட்டிஷன் மேளாவில் சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News