மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்
- பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18-ம் தேதி அன்றும் இந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
- இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குவதற்காக, வட்டாரம் வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு, மனநலன், கண், காது மூக்கு தொண்டை மருத்துவர் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர்.
இந்த மருத்துவச் சான்று அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் திருக்காட்டு ப்பள்ளி சிவசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் வருகிற 8-ம் தேதி ( புதன்கிழமை), பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் தேதி, பட்டுக்கோட்டை நகராட்சி கண்டியன் தெரு நடுநிலைப் பள்ளியில் 11-ம் தேதி நடைபெறுகிறது.
இதேபோல் அம்மாபேட்டை ரெஜினா சேலி மேல்நிலைப்பள்ளியில் 14-ந் தேதி , திருவோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 16ஆம் தேதி , மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17-ந் தேதி, பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18-ம் தேதி அன்றும் இந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (5) மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திற னாளிகள் அடையாள அட்டை பெறாத அனைத்து மாற்றத்திற னாளிகளும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெ றலாம்.
மேலும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் (2) ஆகியவற்றுடன் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.