உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் நாளை குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் - தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது

Published On 2022-12-09 09:35 GMT   |   Update On 2022-12-09 09:35 GMT
  • நெல்லை மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
  • முகாமிற்கு வரும் பயனாளிகள் ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுவிநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் நெல்லை மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.

டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (10-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களிலுள்ள தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.

புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம், புைகப்படம் மாற்றம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முகாமிற்கு வரும் பயனாளிகள் ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும்.

இந்த முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை 93424-71314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News