பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர சிறப்பு முகாம்
- மாதம் தோறும் 2-வது செவ்வாய்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
- வைப்புத் தொகை ரசீதுகள் பெற நட வடிக்கை மேற்கொள்ளுதல்
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
கடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18 வயது நிறைவடைந்தும் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்காமல் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கும் மாவட்ட கலெக்டர்வளாகம், மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் மாதம் தோறும் 2-வது செவ்வாய் கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை எனில் ரூ. 50 ஆயிரத்திற்கான நிலை வைப்புத் தொகையும், 2பெண் குழந்தைகள் எனில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் நிலை வைப்புத் தொகை செய்யப்பட்டு வருகிறது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் ஆக மொத்தம் மூன்று பெண் குழந்தைகளுக்கும் சிறப்பு அனுமதியின் பெயரில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் பெற்று பயனடையலாம்.
முகாமில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்த்தல், விண்ணப்பித்த 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், விண்ணப்பித்து நீண்ட நாட்களாக வைப்புத் தொகை ரசீதுகள் பெறாமல் இருப்பவர்களுக்கு வைப்புத் தொகை ரசீதுகள் பெற நட வடிக்கை மேற்கொள்ளுதல், வைப்புத் தொகை ரசீதுகளில் பெயர், பிறந்த தேதி மாற்றம் இருப்பின் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளு வதற்கு இந்த சிறப்பு முகாமில் பொது மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.