உள்ளூர் செய்திகள்

வித்யா பிரகாசம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் சிறப்பு ஆலோசனை கூட்டம்

Published On 2023-08-25 09:00 GMT   |   Update On 2023-08-25 09:00 GMT
  • கூட்டத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிய விஞ்ஞானிகளை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • வேறு எந்த உலக விண்வெளி சக்திகளாலும் செய்ய முடியாத வெற்றியை இஸ்ரோ செய்துள்ளது.

கோவில்பட்டி:

ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவனர் சீனிவாசன், செயலாளர் ஜோதி காமாட்சி, தலைவர் ஜெயக்கொடி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் கடந்த வாரத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நடைபெற உழைத்திட்ட நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டி பேசினர். தொடர்ந்து சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிய விஞ்ஞா னிகளை பாராட்டி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வித்யா பிரகாசம் மன வளர்ச்சி குன்றி யோருக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது.

நிகழ்ச்சியில் பொரு ளாளர் கார்த்திகேயன், நிர்வாக குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி பேசுகையில், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா. விண்வெளி துறையில் இந்தியாவின் வலிமை பறைசாற்றப்பட்டுள்ளது. வேறு எந்த உலக விண்வெளி சக்திகளாலும் செய்ய முடியாத வெற்றியை இஸ்ரோ செய்துள்ளது.

எனவே இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி தலை வணங்குகிறோம் என்றார்.

நிகழ்ச்சியில் சந்திரசேகர், சந்தர கண்ணன், பொண்ணு பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி, முத்து மாரியப்பன், முருகன் மற்றும் ஆசிரியர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News