உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-11-05 07:02 GMT   |   Update On 2023-11-05 07:02 GMT
  • முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் குருசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
  • சித்த மருத்துவ பிரிவு சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

சாத்தான்குளம்:

தற்போது பருவமழை பெய்து வருவதால் மழைக்கால காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி ஆலோச னையின் பேரில் சாத்தான்குளம் வட்டாரத்தில் வாலத்தூர், பொத்தகாலன்விளை, மனோ ரம்மியபுரம், சங்கரன் குடியிருப்பு, புத்தன்தருவை, பெரியதாழை ஆகிய 6 இடங்களில் மழைக்கால சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது .

முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் குருசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். காய்ச்சல் போன்ற சிறு உபாதைகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமான நோயாளிகள் பயன்பெற்றனர். சித்த மருத்துவ பிரிவு சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

முகாமில் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், கிராம சுகாதார செவிலியர் மாலதி, செவிலியர் பவித்ரா, மக்களை தேடி மருத்துவ திட்ட செவிலியர் ஷேர்லி, ஆஷா பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிராம ஊராட்சி மூலம் ஓட்டு மொத்த துப்புரவு பணி செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது .குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி குடிநீரில் குளோரின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. வாலத்தூர், பொத்தகாலன் விளை கிராம பகுதிகளில் டெங்கு மஸ்தூர் பணியா ளர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணியும் மேற்கொள் ளப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் இதே போன்று காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News