உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்
- 21 ஊராட்சிகளும் மற்றும் பேரூராட்சிகளிலும் இன்று நடைபெற்றது
- பல்வேறு விஷயங்களை குறித்து கிராம மக்களிடம் விவாதிக்கப்பட்டது.
அன்னூர்:
கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தில் 21 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளது. இந்த நிலையில் இன்று உள்ளாட்சி தினத்தையொட்டி ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்-அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இதையடுத்து கிராம சபை கூட்டம் 21 ஊராட்சிகளும் மற்றும் பேரூராட்சிகளிலும் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை கவுரவித்தல், மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சஜீவன் திட்டம், பருவமழை முனஎச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்களை குறித்து கிராம மக்களிடம் விவாதிக்கப்பட்டது.
இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர் நியமனம் செய்ய அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.