கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடலூரில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கலெக்டர் தகவல்
- கடலூர் மாவட்டத்தில் 3 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
- காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் 3 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 12.8.2023, 23.9.2023 மற்றும் 25.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்வாக, 12.8.2023 (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த பல முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 -ம்வகுப்பு, 10 -ம்வகுப்பு, 12 -ம்வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியினை உடைய வர்களும் கலந்துக்கொண்டு பயன்பெற லாம். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 12.8.2023 (சனிக்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.