உள்ளூர் செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.

100 நாள் வேலை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-04-28 07:11 GMT   |   Update On 2023-04-28 07:11 GMT
  • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

ஏற்காடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி மற்றும் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் டாக்டர் விஜயகுமார் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் சிறு உபாதைகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்காடு வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் முகாமில் கலந்துகொண்ட பணியாளர்களுக்கு தோல் வியாதி குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஏற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார் செய்திருந்தார். முகாமில் 70-க்கும் மேற்ட்ட 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News