திசையன்விளை பல்கலைக்கழக கல்லூரியில் ஆளுமைப்பண்பு வளர்த்தல் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி
- திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் வணிகவியல் துறை நடத்திய ஆளுமைப்பண்பு வளர்த்தல் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினர் ஆளுமை பண்பு வளர்த்தல்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
திசையன்விளை:
திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் வணிகவியல் துறை நடத்திய ஆளுமைப்பண்பு வளர்த்தல் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கி பேசினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சண்முகம் வரவேற்று பேசினார். மேலும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் யமுனா சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுக உரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 'ஆளுமை பண்பு வளர்த்தல்' என்னும் தலைப்பில் 'ஆளுமை பண்பே நம் ஒவ்வொருவரின் சிறந்த தலைமை பண்பு' என ஒளிப்பட காட்டியின் மூலம் பண்படுத்துதல், வளர்ச்சி, மனநிலை குறித்து வகுப்புகள் நடத்தி சிறப்புரையாற்றினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஒயிட்டன் சகாயராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்கள் இந்துமதி, உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகர், கணிதத்துறை உதவி பேராசிரியர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.