உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கீழப்பாவூர் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள்

Published On 2022-08-25 09:00 GMT   |   Update On 2022-08-25 09:00 GMT
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கீழப்பாவூரில் உள்ள விநாயகர் கோவிலில் தினந்தோறும் வெவ்வேறு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
  • வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப ஜபம், விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

தென்காசி:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கீழப்பாவூரில் உள்ள விநாயகர் கோவிலில் தினந்தோறும் வெவ்வேறு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7 மணிக்கு விசேஷ அலங்காரம், 1,008 அர்ச்சனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை நடைபெறுகின்றன. வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப ஜபம், விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

Tags:    

Similar News