உள்ளூர் செய்திகள்

சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராமநாதர்.

ராமநாதருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம்

Published On 2023-04-01 09:02 GMT   |   Update On 2023-04-01 09:02 GMT
  • புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.

அகஸ்தியருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளித்த இடம்.

மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் உள்ள ராமநாதருக்கு ராமநவமியை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.

தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது.

பின்னர், ராமநாதருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News