உள்ளூர் செய்திகள்

கோவையில் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி

Published On 2023-02-06 09:15 GMT   |   Update On 2023-02-06 09:15 GMT
  • 3-வது தளத்தில் இருந்து போலீஸ் கமிஷனர் கயிறு கட்டி இறங்கினார்
  • அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் 30 போலீசார் தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை,

மர்ம நபர்களால் யாராவது கடத்தப்பட்டா லோ, தீவிரவாதிகளால் மால்கள், ஓட்டல்களில் பிணைக்கைதியாக அடைக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, சம்பவ இடத்துக்கு சென்று, பாதிக்கப்பட்டோரை மீட்க சிறப்பு பயிற்சிகள் தேவைப்படுகின்றது.

இந்த பயிற்சியை, கோவை மாநகர போலீசாருக்கு அளிக்க கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் 30 போலீசார் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எஸ்.டி.எப். குழுவினர் பயிற்சி அளித்தனர். அவர்கள் போலீசாருக்கு அடுக்குமாடி கட்டிடங்களில் கயிற்றின் மூலம் மேலே ஏறுவது, , அங்கிருந்து கயிற்றின் மூலம் விரைவாக கீழே இறங்குவது, ஆட்களை மீட்டு கொண்டு வருதல், பிணைக்கைதியாக பிடிபட்டவர்களை மீட்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

மேலும் துப்பாக்கிகளை கையாளுவது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பயிற்சி பெற்ற போலீசார், தாங்கள் கற்றுக்கொண்ட திறமைகளை வெளிப்ப டுத்தினர்.

அதனை போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் அடுக்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து கயிறு மூலம் கீழே இறங்கி போலீசாரை உற்சாகப்படுத்தினார்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, கயிறு மூலம் அடுக்கு மாடி கட்டிடங்களில் ஏறி, இறங்கும் பயிற்சி, போலீசில் சேர்ந்தபோது அளிக்கப்பட்டது. அதை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, கோவையில் நடந்த இந்த பயிற்சி அமைந்தது என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் போலீஸ் கமிஷனர் பயிற்சி பெற்ற போலீசார் மற்றும் எஸ்.டி.எப்., குழுவினருக்கு நினைவு பரிசினை வழங்கினார். 

Tags:    

Similar News