உள்ளூர் செய்திகள்
ஆடி வெள்ளியையொட்டி சின்னமனூர் பூலாந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
- மீனாட்சி அம்மன் வேடத்தில் சிவகாமியம்மனை அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது.
- இரவு 7:30 மணியில் இருந்து 9 மணிக்குள் ஓதுவார் பாட்டு பாட மேல தாளங்களுடன் பள்ளியறை பூஜை சிவகாமி அம்மன் பூலாநந்தீஸ்வரருக்கு நடைபெற்றது.
சின்னமனூர்:
சின்னமனூர் சிவகாமிஅம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கோவிலைச் சுற்றி வயல்வெளிகளும், கரும்புத்தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் என இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. பூலாநந்தீஸ்வரருக்கு பிரதோஷ காலங்களில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.
ஆடிவெள்ளியையொட்டி துர்க்கை அம்மன், சிவகாமிஅம்மன், பூலாநந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் மீனாட்சி அம்மன் வேடத்தில் சிவகாமியம்மனை அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது. இரவு 7:30 மணியில் இருந்து 9 மணிக்குள் ஓதுவார் பாட்டு பாட மேல தாளங்களுடன் பள்ளியறை பூஜை சிவகாமி அம்மன் பூலாநந்தீஸ்வரருக்கு நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.