உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் 64 வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு-16-ந் தேதி நடக்கிறது

Published On 2022-12-13 09:46 GMT   |   Update On 2022-12-13 09:46 GMT
  • பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
  • மதியம் 12 மணிக்கு மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11 அடி உயரத்தில் மஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் மற்றும் விநாயகர், குருமகா லிங்கேஸ்வரர், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், வராகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இங்கு பைரவரின் பிறந்த தினமும், மஹாதேவ காலபைரவாஷ்டமி நாளான வருகிற 16-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சுவாமி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவவேண்டியும், இந்தியாவில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும் ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

காலை 8.45 மணிக்கு விநாயகர் வழிபாடும், 9மணிக்கு கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜையும், காலை 10மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவ-காலபைரவர் ஹோமமும் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.30மணிக்கு மஹா காலபைரவருக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 64 வகையான சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.மதியம் 12 மணிக்கு ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பலவகையான மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபார தனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4.30மணிக்கு காலபைரவர் மஹா யாக வழிபாடுகள் தீபாரதனையுடன் நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழி பாட்டுக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்ற னர்.

Tags:    

Similar News