உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய காட்சி

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் பேச்சுப்போட்டி; பாளை மாணவி வெற்றி

Published On 2022-11-12 09:13 GMT   |   Update On 2022-11-12 09:13 GMT
  • உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விண்வெளி குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
  • வெற்றி பெற்ற மாணவி மரிய புஷ்பத்தை பள்ளி தாளாளர் சாமுவேல பாஸ்கர் ராஜ், முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

நெல்லை:

உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விண்வெளி குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இதில் பாளை பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளி மாணவி மரிய புஷ்பம் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவருக்கு கேரள முதல்-அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனருமான சந்திர தத்தன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

வெற்றி பெற்ற மாணவி மரிய புஷ்பத்தை பள்ளி தாளாளர் சாமுவேல பாஸ்கர் ராஜ், முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News