உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

Published On 2023-10-21 09:19 GMT   |   Update On 2023-10-21 09:19 GMT
  • அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை ஏற்பாடு
  • போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் வருகிற 27-ந் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப அறிவுறுத்தல்

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா, பெரியார் பிறந்தநாளை யொட்டி வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட உள்ளது.

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் காலை 10 மணிக்கு இந்த போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்புடன் திறமையை வெளிப்ப டுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து, 2 பேருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

போட்டிகளுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடை பெறும் நேரத்தில் மாண வர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப் பெறுவர்.

எனவே தரப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் பரிந்து ரையுடன் ஒப்பமும் பெற்று வருகிற 27-ந் தேதிக்கு ootytamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News