திருவாரூரில் 13-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு பேச்சுபோட்டி
- தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும்.
- முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000-, மூன்றாம் பரிசு ரூ.5,000-வீதம் வழங்கப்பெறும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பின் படி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெற உள்ளன.
இதன்படி, வருகிற 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை ) அன்று திருவாரூர் மாவட்ட த்திலுள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.
போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தேர்வு செய்து அனுப்புவார். கட்டுரை போட்டிக்கு, தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள், பேச்சு போட்டிக்கு தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமி ழறிஞர் கலைஞரின் எழுதுகோல் தலைப்பு ஆகும்.
போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்க ளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000-, மூன்றாம் பரிசு ரூ.5,000-வீதம் வழங்கப்பெறும்.
பள்ளிகளில் பயிலும் மாணவ ,மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.