அரசு கலைக் கல்லூரியில் பேச்சுப்போட்டி
- தொடர்ந்து நடைபெற்ற பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் கணிதத் துறை மாணவி சுபாஷினி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு பெற்றார்.
மேலும் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக 14 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
இதில் மூன்றாம் ஆண்டு தமிழ்துறை மாணவன் சூர்யா இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர்முனைவர் விஜயலட்சுமி கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேரவை தலைவர் குமார், தமிழ்துறை தலைவர் சசிகுமார், துறை தலைவர்கள் நாராயணசாமி, சாந்தி, கார்த்திகா, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன், நூலகர் சுப்பிரமணியன், நுண்களை மன்ற போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வாழ்த்து பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.