திருமருகல் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்
- சாலை விபத்துக்கள் அதிகமாக தினமும் நடைபெறுகின்றன.
- பொதுமக்கள் அனைவரும் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை சாலையில் அதிகமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருமருகலை சுற்றியுள்ள சுமார் 20 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த சந்தைப்பேட்டை சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிவேகத்திலும் கட்டுபா டின்றி செல்வதாலும், சாலை விபத்துக்கள் அதிகமாக தினந்தோறும் நடை பெறுகின்றன.
பொதுமக்கள் அனை வரும் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதியும்,சாலை விபத்து ஏற்படாமல் இருப்ப தற்கும்,அரசு மருத்துவமனை அருகில் வேகக்கட்டுப்பாட்டு தடையும், சந்தைப்பேட்டை சாலையிலும், அண்ணாமலை நகர் சாலையும் சந்திக்கும் இடத்தில் வேகக்கட்டுப்பாட்டு தடையும் அமைத்து தரும்படி பொதுமக்கள் சார்பாகவும், திருமருகல் வர்த்தகர்கள் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.