உள்ளூர் செய்திகள் (District)

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-11-29 09:50 GMT   |   Update On 2022-11-29 09:50 GMT
  • சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அன்னைசத்யா விளையாட்டு அரங்கில் இன்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி களுக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதனை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட செவிதிறன், பார்வையாற்றோர், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட 600-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாற்று திறனாளிகள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுவாமிநாதன் செய்திருந்தார்.

Tags:    

Similar News